கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு
கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு சிறிய செஸ்னா 172 விமானத்தை கடத்திய ஒருவரை ரோயல் கனேடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) கைது செய்துள்ளது.
விமானம் வான்கூவரில் தரையிறங்கிய பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, வான்கூவர் தீவில் இருந்து ஒரு விமானம் கடத்தப்பட்டு வான்கூவர் சர்வதேச விமான நிலையம் அருகே வான்வெளியில் நுழைந்ததாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
திருப்பி விடப்பட்ட விமானங்கள்
இந்த சம்பவத்தின் போது விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் வான்கூவர் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
Avsec crisis ! A suspect was arrested at Vancouver International Airport (YVR) after allegedly highjacking a light aircraft from the Vancouver Island area on Tuesday (July 15).
— FL360aero (@fl360aero) July 16, 2025
Richmond RCMP received the report that a Cessna 172S Skyhawk SP (C-GTLF) had reportedly been… pic.twitter.com/lV9PbTfmRb
இந்நிலையில், சம்பவம் குறித்து குறித்து கனேடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

