ஒரே இரவில் 100 டொலர் விலை வரம்பை தாண்டிய கச்சா எண்ணை விலை
Economy of Sri Lanka
Crude Oil Prices Today
World Economic Crisis
By Dharu
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுடனான போர் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் எண்ணெய் விலைகள் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன்படி தொடர்ந்து மூன்றாவது நாட்களுக்குப் பிறகு, ஒரே இரவில் மீண்டும் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர் விலை வரம்பை தாண்டியுள்ளது.
எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகள்
சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகள் நேற்று ஒருமனதாக 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உலக சந்தையில் வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்ட போதிலும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது.

(AT 09.11AM - 12.03.2026)
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் நேற்று ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் விலை வரம்பை கொண்டிருந்தது.
இதற்கிடையில், அமெரிக்க அளவுகோலான WTI எண்யை 8.7% 94.8 டொலராக உயர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்