வெளிநாடொன்றுக்கு ட்ரம்ப் வழங்கிய பெரும் வரிச்சலுகை!
Donald Trump
Indonesia
Trump tariff
By Dilakshan
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 19% வரி விதித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, முன்னர் குறிப்பிடப்பட்ட 32% வரியை 19% ஆக குறைக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
ட்ரம்பின் சலுகை
இந்தோனேசியா அமெரிக்க எரிசக்தி மற்றும் விவசாய பொருட்களையும், பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள போயிங் ஜெட் விமானங்களையும் வாங்க ஒப்புக்கொண்டதை அடுத்து ட்ரம்ப் இந்த சலுகையை வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

