வட்ட மேசை மாநாட்டிற்கு இணங்கிய சீனா - நாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமா...
உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனரான சீனா உலக சமூகம் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க ஒரு வட்ட மேசை மாநாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த வட்டமேசை கலந்துரையாடல் உயர் மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், G20 உச்சி மாநாடு அமைப்பு ஆகியவை கடன் வழங்குபவர்கள், கடன் வாங்கிய சில தரப்பினர் மற்றும் தனியார் கடனாளிகளுடன் இணைந்து சீனா இதில் பங்கேற்க வேண்டும் என்றும் ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் நெருக்கடிக்கு தீர்வு
அண்மையில் சீன இளைஞர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னர், ஏழை மற்றும் வளரும் நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
கடன் நிவாரணச் செயல்முறையை நியாயமானதாக்க, தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பலதரப்பு முகவர்கள் முலம் வழங்கப்படும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்ய சீனா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)