தமிழர் பகுதிக்குள் கால்வைத்த சீனர்களுக்கு அபாயமணி!!
இந்தியாவை அண்மித்த இலங்கையின் தமிழர் பகுதிக்கு சீனர்கள் வருகை தந்துள்ளமையானது சீனர்களுக்கே ஆபத்தாக அமையுமே தவிர ஒருபோதும் அவை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறாது என இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன் (R. Harikaran) கூறியுள்ளார்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணலில் பங்கேற்ற அவர், இலங்கை அரசியலின் பேசுப்பொருளாக மாறியுள்ள சீனா - இந்திய விவகாரங்கள், இந்தியாவின் எதிர்கால திட்டங்கள், தமிழர் தரப்பின் நிலை எனப் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
குறித்த நேர்காணலில் மேலும் பகிர்வுகளை வழங்கிய அவர்,
“2000 கிலோமீட்டர் கடந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள யாழிற்கு சீனர்கள் வருகை தந்தமையால் இந்தியா குறித்து சீனர்களே பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு சீனர்களை பிடிக்காது என்ற கருத்து தொடர்ச்சியாக நிலவிவருகின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு சீனா கரம் கொடுத்தால் சீனர்கள் மீதான துவேசத்தை குறைக்கும் அணுகுமுறையாக அது காணப்படலாம்.
வரலாற்றில் ஒரு போதும் இல்லாத அளவு 2021 ஆண்டு இந்திய,சீனா பொருளாதார, வர்த்தக வணிக உறவுகள் அதிகரித்துள்ளது. இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவு ஆயுதங்களையும் வாங்கியுள்ளது.
அரசியல், எல்லைப் பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு வியாபாரம் ரீதியிலாக நாம் பயன்பெறலாம் என்பதே சீனாவின் கொள்கை. ஜனநாயக நாட்டில் இதனைப் பார்க்க முடியாது. இவற்றினையே இலங்கை விடயத்திலும் சீனர்கள் கையாளுகின்றனர்.
இந்தியாவுடன் உறவு வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இலங்கைக்கும் எமக்கும் இடையிலான உறவில் யாராவது தலையிட்டால் பாடம் புகட்டுவேன் என சீனா துதுவர் சென்னையில் தெரிவித்துள்ளமை முக்கிய விடயம்” எனக் கூறியுள்ளார்.
