சீனாவில் திடீர் நிலச்சரிவு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!
China
Death
Weather
By Dharu
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணி
சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்