லொட்டரியில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஷ்டம்
நாற்பது லொட்டரி சீட்டுகளை வாங்கிய சீன நபர் ஒருவருக்கு பரிசுத்தொகையாக 220 மில்லியன் யுவான் (இலங்கை ரூ. 1120 கோடி) கிடைத்துள்ளது.
லி என்ற புனைப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி நபர், குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் 11 டொலருக்கு 40 லொட்டரி சீட்டுகளை வாங்கினார்.
அனைத்தையும் ஒரே 7 எண்களில் வாங்கிய நிலையில், அந்த ஏழு எண்கள் வெற்றி பெற்றது. இதனால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5.48 மில்லியன் யுவான் என்ற கணக்கில், மொத்தம் 220 மில்லியன் யுவான் பரிசுத்தொகையை அவர் வென்றார்.
தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை
பணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைந்தாலும், அந்த நபர் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், தனது குடும்பத்தினர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நான் என் மனைவியிடமோ அல்லது குழந்தையிடமோ சொல்லவில்லை. அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக உணரலாம் மற்றும் எதிர்காலத்தில் கடினமாக உழைக்கவோ அல்லது படிக்கவோ மாட்டார்கள் என்று நான் கவலைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
5 மில்லியன் யுவானைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்து 43 மில்லியன் யுவான் வரி விதிக்கப்பட்ட பிறகு லி 171 மில்லியன் யுவான் (இலங்கை. ரூ. 620 கோடி) வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
