உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாக கொண்டு தாய்வானை தாக்க சீனா திட்டம்?
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உலக நாட்டு அதிபர்களின் கவனம் உக்ரைன் மீது உள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சீன ஜி ஜின் பிங் அரசு தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ எச்சரித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒருவேளை ரஷ்யா உக்ரைனை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கைப்பற்றிவிட்டால் அடுத்து சீனா தாய்வான் மீது ரஷ்யா போல ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆயுதமேந்தி படையெடுத்து வந்தபோது அஷ்ரப் கனி அரசு பின்வாங்கியது போன்று உக்ரைனில் விளாடிமிர் மற்றும் ஜெலன்ஸ்கி அரசு பின்வாங்கவில்லை.
தொடர்ந்து தங்கள் உரிமைக்காக போராடி வருகிறது. ஒருவேளை சீனா, தாய்வான் மீது படையெடுத்து வந்தாலும் தன்னால் இயன்றவரை போராடிய தீருவார் என்பதில் சந்தேகமில்லை என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சீனாவின் இராணுவம் தாய்வானை கட்டுக்குள் கொண்டுவர அதிக நேரம் பிடிக்காது. ஒருவேளை தாய்வானை சீனா இவ்வாறு சர்வாதிகாரம் மூலம் ஆக்கிரமித்தால் அது மறைமுகமாக இந்தியாவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதிகளில் சீனா இந்திய எல்லை படையுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. போர் மூலமாக ஒரு நாட்டை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை சீன கம்யூனிச அரசை பெற்றுவிட்டால் இதையடுத்து சீனாவின் அடுத்த இலக்கு தாய்வான் மற்றும் இந்தியாவாகத் தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
சீனாவின் இந்த சர்வாதிகார முயற்சி பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் வரவேற்கப்படும். ஆனால் ஒருவேளை உக்ரைன் தனது போரில் வென்று ரஷ்யாவின் இரும்பு பிடியிலிருந்து மீண்டால் சீனா, தாய்வான் மீது படை எடுக்கும் தனது திட்டத்தை கைவிடவும் வாய்ப்பு உள்ளது அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.