சீன அதிபரின் மறைவிற்கு சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் பிரதமர் இரங்கல்!
சீனாவின் முன்னாள் அதிபரான ஜியாங் ஜெமின் (H.E. Jiang Zemin) மறைவுக்கு சிறிலங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (02) கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்ற அதிபர் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் விசேட குறிப்பினை பதிவு செய்து மறைந்த முன்னாள் சீன அதிபருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சிறந்த தலைவர் ஜியாங் ஜெமின்; அதிபர் ரணில்
அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய தலைவர்களுள் சிறந்த தலைவர் ஜியாங் ஜெமின் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் மகிந்த இரங்கல்
இதேவேளை ஜியாங் ஜெமின் (H.E. Jiang Zemin) மறைவுக்கு சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நேற்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று மறைந்த சீன அதிபருக்கு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
சீனாவின் முன்னாள் அதிபரான ஜியாங் ஜெமின் 1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய ராணுவ ஆணையகத்தின் தலைவராகவும் செயற்பட்டதோடு, 1993 முதல் 2003 வரை சீனாவின் அதிபராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
