இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள பெரும் உதவி
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங், விரைவில் இலங்கைக்கு 100 நவீன, சொகுசு மின்சார பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடனான நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து தூதுவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுமார் 225,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள 100 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க சீனா தயாராக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவிகள்
தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையின் மறுகட்டமைப்பு மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீதி அபிவிருத்தி மற்றும் பால புனரமைப்பு தொடர்பான ஆறு சீன நிபுணர்கள் சமீபத்தில் இலங்கைக்கு வந்ததையும் தூதுவர் மேலும் நினைவு கூர்ந்துள்ளார்.
இதேவேளை, பதுளை மற்றும் நுவரெலியா பகுதிகளில் உள்ள பல பாலங்கள் ஏற்கனவே பழுதுபார்க்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் மீதமுள்ள பாலங்களின் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |