வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்த வெளிநாடுகள்! எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி
எரிபொருள் விலை உயர்வால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் எரிபொருளைச் சேமிக்க தங்கள் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளன.
பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 நாட்கள் விடுமுறை
அண்டை நாடான பாகிஸ்தான், தனது பொது ஊழியர்களை வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு கூடுதலாக, வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
‘ஈத் முபாரக்’ எனப்படும் பண்டிகை நாள் வரை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து
சில வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் மக்கள் லிஃப்ட் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு படிக்கட்டுகளைப் பயன்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தாய்லாந்து அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார், இது இன்று (மார்ச் 10) முதல் நடைமுறைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |