சிறிலங்கா தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள வலியுறுத்தல் - வெளியானது சீனாவின் முக்கிய அறிவிப்பு!
இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் சீனா அறிவித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. அதேவேளை சிறிலங்காவிற்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜப்பான் அழைப்பு
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாட, சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என ஜப்பானிய நிதி அமைச்சர் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சீனாவின் நிலைப்பாட்டை தற்போது அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது.
சிறிலங்கா பொருளாதார வளர்ச்சிக்கு உதவி
ஆகவே சிறிலங்காவின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தம்மால் இயன்ற உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் முறையான தீர்வுகளுக்காக சிறிலங்காவுடன் கலந்தாலோசிப்பதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிப்பதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)