சீனாவின் பொறிக்குள் சிக்குமா இந்தியா : கேள்விக்குறியாகும் அடுத்த மணித்தியாலங்கள்
இந்தியாவுக்கும் (India), பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையே நிலவும் இந்தப் பதற்றமான சூழலை சீனா தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அன்று, ஜம்மு காஷ்மீரின் (Kashmir) பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பிறகு, இந்திய தரப்பு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடை நிறுத்தம் செய்ததுடன், அட்டாரி எல்லையை மூடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
மறுபுறம், சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவு உட்பட இந்தியாவுக்கு எதிரான பல முடிவுகளை பாகிஸ்தானும் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், பாகிஸ்தானும், சீனாவும் மிகச் சிறந்த நட்பு நாடுகளாக இருக்கின்றன. பொருளாதார ரீதியாகவோ அல்லது பாதுகாப்புத் துறையிலோ, சீனா பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது.
இந்த இரண்டு நாடுகளின் நட்பு சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாடுகளின் நட்பு முன்னர் இவ்வளவு ஆழமாக இருந்ததில்லை. என்று தான் சொல்ல வேண்டும்.
இதேவேளை, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தெரிவித்துள்ளது.
மேலும் காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய இராணுவமும் பதிலடி வழங்கி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சீனா இந்த பதற்றத்தை பயன்படுத்தி இந்தியா மீது எவ்வாறான முறையில் பாகிஸ்தானை வைத்து தனது காய்களை நகர்த்த போகிறது என்பது தற்போது சர்வதேச பரப்பில் அதிகம் உற்று நோக்க கூடிய ஒன்றாக காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
