கமேனி மீதான தாக்குதல்...! இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே எச்சரித்திருந்த சீனா!
கடந்த சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே, இஸ்ரேலிய போர் விமானங்களின் நகர்வு குறித்த துல்லியமான தகவலைச் சீனா ஈரானுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த எச்சரிக்கை ஈரானிய தற்காப்பு அமைப்புகளால் உதாசீனம் செய்யப்பட்டதா அல்லது அந்தத் தகவல் உரிய அதிகாரிகளைச் சென்றடையாமல் தடுக்கப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருந்த போதிலும் தாக்குதலின் வேகம் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பைச் சீர்குலைத்திருக்கலாம் என்பதே பாதுகாப்பு வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
ஒரு வல்லரசு நாட்டின் நேரடி எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் இத்தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியிருப்பது, ஈரானின் உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பில் உள்ள பெரும் ஓட்டைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சீனாவின் துல்லியமான தகவல் ஈரானைச் சென்றடைவதை இஸ்ரேலின் தொழில்நுட்ப மேலாதிக்கம் தடுத்திருக்கலாம் அல்லது ஈரானின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் நிலவிய ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் அந்த எச்சரிக்கை முறையாகக் கையாளப்படாமல் போனதே இத்தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |