இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவு
சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதித் தலைவர் டென் பொசின் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆகியோருக்கு இடையில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அனைத்து நட்பு நாடுகள் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆலோசனைகள், உதவிகள் மற்றும் ஆதரவை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீன பிரதிநிதிகளிடம் கூறினார்.
இலங்கைக்கான ஆதரவு தொடரும்
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் பிரதித் தலைவர் டென் பொசின், இலங்கை மிகவும் நட்பு நாடு என்ற வகையில், இலங்கைக்கு தேவையான ஆதரவை சீனா தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்தார்.
சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையின் பிரதிநிதியாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங் மற்றும் அதன் பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர்கள் உட்பட இராஜதந்திர அதிகாரிகள் குழுவும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
