கண்டியில் சீன தூதுவர் - பயணத்தை இரத்து செய்த இந்திய உயர்ஸ்தானிகர்
கண்டியில் சீன தூதுவர்
சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று (27) பிற்பகல் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
முன்னதாக அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற சீன தூதுவர் அஸ்கிரி மஹாநாயக்கரை தரிசித்தார். பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு வந்த சீனத் தூதுவர், மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கலவை தரிசித்து ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பின்போது சீன - இலங்கை உறவின் அண்மைக்கால வளர்ச்சி, இலங்கை பௌத்த மதத்திற்கு சீனா அளித்து வரும் மிகப்பெரிய நன்கொடை தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்திய உயர் ஸ்தானிகரின் கண்டிக்கான பயணம் இரத்து
Ambassador Qi Zhenhong & Mme. Jin Qian called-on the Mahanayake Theros of the Asgiri and the Malwatta Chapters in Kandy today (27th). Latest development of #China-#SriLanka relations and a huge donation from #Chinese Buddhist circle to #lka were well briefed & discussed.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) August 27, 2022
???? pic.twitter.com/2Qbc3nXYE5
இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கண்டிக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அந்த விஜயம் திடீரென இரத்துச் செய்யப்பட்டது.

