கட்டுநாயக்க வந்த விமானத்தில் கைவரிசையை காட்டிய சீன பிரஜை :வெறுங்கையுடன் நிற்கும் தொழிலதிபர்
கட்டுநாயக்க நோக்கி வந்த விமானத்தில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான 14,000 அமெரிக்க டொலர்களை திருடிய சீன பிரஜையை கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரும் விமான நிலைய சுற்றுலா காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
47 வயதான லெபனான் வர்த்தகர் ஒருவர் தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஓமன் எயார்லைன்ஸ் விமானமான WY-371 மூலம் ஓமானின் மஸ்கட்டில் இருந்து 12/13 காலை 07.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.
ஓமன் எயார் லைன்ஸில் வந்த தொழிலதிபர்
இந்த விமானத்தின் வணிக வகுப்பு இருக்கைகளில் இந்த தொழிலதிபரும் அவரது தாயும் வந்திருந்தனர், அவர்களுடன் சீன நாட்டவர் உட்பட மேலும் மூவரும் வந்துள்ளனர்.
லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பை விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் பெட்டியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விமானம் இரவில் பயணித்ததால், விமானத்தின் உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டு, பயணிகள் நன்றாக தூங்குவதற்கு தேவையான பின்னணி தயார் செய்யப்பட்டது.
வணிக வகுப்பில் இருந்த சீன நபரின் கைவரிசை
இந்தநிலையில், இந்த விமானத்தின் வணிக வகுப்பில் இருந்த சீன நபர், லெபனான் தொழிலதிபரின் கைப்பையைத் திறந்து, பணப்பையில் இருந்த 14,000 அமெரிக்க டொலர்களை திருடி, அதற்கு பதிலாக எகிப்திய கரன்சியின் 18 நோட்டுகளை கைப்பையில் வைத்தார்.
இதுபற்றி எதுவும் தெரியாத லெபனான் நாட்டு வர்த்தகர், விமானத்தில் இருந்து இறங்கி தனது அமெரிக்க நாணயத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள வங்கிகளுக்குச் சென்றார்.
அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை
ஆனால் தனது பணப்பையில் இருந்த 14,000 அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா காவல்துறையினரிடமும் விமான நிலைய காவல்துறையினரிடமும் முறைப்பாடு செய்திருந்தார்.
விமான சிப்பந்திகளிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த சீன பிரஜையே பணத்தை திருடியது உறுதி செய்யப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |