சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலக்கரி உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியமான ஷாங்க்சியில் உள்ள ஹுவாஜின் கோக்கிங் நிலக்கரி நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நிலக்கரியை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் பதுங்கு குழியை நான்கு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
மூவர் பலி
விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 பணியாளர்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததுள்ளதுடன் ஏனைய மூவரும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை
ஆகஸ்ட் மாதம் ஷாங்க்சியில் நிலக்கரி சுரங்க வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் செப்டம்பர் மாதம் 16 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம், ஷாங்சியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |