அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணைக இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை
சமீபத்தில் அமெரிக்கக் கடற்படையால் இடைமறிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் சீனாவிலிருந்து ஏவுகணைகளுக்கான இரசாயன பொருட்களை ஏற்றி வந்ததுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்கத் தூதரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி, தெரிவித்துள்ளார்.
தனது x தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஹேலி இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா கைப்பற்றிய கப்பல்
"இந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கைப்பற்றிய கப்பல், சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்று கொண்டிருந்ததுடன், ஏவுகணைகளுக்கான இரசாயனப் பொருட்களைக் கொண்டு செல்வதுடனும் தொடர்புடையது.

இந்நிலையிலேயே நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அது ஏற்க மறுத்தது," என்று அவர் கூறியுள்ளார். ஈரானுக்கு ஆதரவளிப்பதில் சீனாவின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என்பதற்கு இது மற்றுமொரு நினைவூட்டல் என்றும், இது புறக்கணிக்க முடியாத ஒரு யதார்த்தம் எனவும் கூறியுள்ளார்.
இத்தகைய ஒத்துழைப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கப்பல் 'டௌஸ்கா' என அடையாளம் காணப்பட்டது.
கப்பல் கண்காணிப்புத் தரவு
இது, ஏற்கனவே அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான ஈரானிய இஸ்லாமியக் குடியரசு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் (IRISL) வலையமைப்பின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.
The ship the U.S. seized in the Strait of Hormuz this weekend was headed from China to Iran and is linked to chemical shipments for missiles.
— Nikki Haley (@NikkiHaley) April 20, 2026
It refused repeated orders to stop.
Another reminder that China is helping prop up Iran’s regime—a reality that can’t be ignored.
மரைன் டிராஃபிக் நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, ஓமான் வளைகுடாவில் உள்ள ஈரானின் சாபஹார் துறைமுகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் அந்தக் கப்பலில் ஏறின. இந்தச் செயலை 'ஆயுதமேந்திய கடற்கொள்ளை' என ஈரான் அழைக்கிறது.
அந்தக் கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டதாக ஈரான் இராணுவம் கூறியதுடன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “ஆயுதமேந்திய கடற்கொள்ளை” என வன்மையாகக் கண்டித்ததமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |