மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு சீன சபாநாயகர் வாழ்த்து
சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ(Lee Sunshu), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இரு நாடுகளின் சட்டவாக்க சபைகளுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதன் ஊடாக இலங்கையுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த சீனா உத்தேசித்துள்ளதாக சீன சபாநாயகர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா சவாலின் ஆரம்பத்திலிருந்து இலங்கையும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவிகளைப் புரிந்திருப்பதுடன், இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு பலமைடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோய்க்கு எதிராகப் போராட சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றும் சீன சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
