சீன பயணிகளுக்கு விதிக்கப்பட்டது தடை
சீனாவில் கொவிட் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் அந்நாட்டு பயணிகள் தங்கள் நாட்டில் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், '
மொராக்கோ விதித்த தடை
சீனாவில் கொவிட் தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மொராக்கோவில் ஒரு புதிய கொவிட் அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா கட்டுப்பாடு
இதேவேளை வரும் 5-ம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை அவுஸ்திரேலியா அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதவாது சீனாவில் இருந்து அவுஸ்திரேலியா வரும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என அவுஸ்திரேலியா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேபோல் கனடாவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அங்கு இந்த கட்டுப்பாடு வரும் 5-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
