பிரான்சில் தீவிரமடையும் காலரா தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), என்னும் தீவில், காலரா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயாட் தீவில் காலரா தொற்று கண்டறியப்பட்டு 48 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலரா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டாவது சிறப்பு சிகிச்சைப்பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலரா தொற்று
அண்மைகால தகவலின்படி 26 பேர் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்ளூர் மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
காலரா என்பது, முறையாக, சரியான நேரத்துக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கர தொற்று நோயாகும்.
விப்ரியோ காலரா என்னும் கிருமியால் உருவாகும் இந்த நோய், சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவின் மூலம் பரவக்கூடும்.
உடனடி சிகிச்சை
பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதால், உடலிலுள்ள சத்துக்கள் வேகமாக வெளியேறி, மரணம் வரை ஏற்படக்கூடும்.
உடனடி ஆன்டிபயாட்டிக் சிகிச்சை, உடலிலிருந்து வெளியேறும் சத்துக்களை ஈடு செய்யும் வகையில் ஊசி முலம் சத்துக்களை ஏற்றுதல் முதலான சிகிச்சைகளுடன், குறைந்தபட்சம் சர்க்கரை, உப்புக்கரைசல் என்னும் oral rehydration solution (ORS)ஐ பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கொடுக்கத் துவங்குவதே பெருமளவில் நல்ல பலன் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு காலரா வைரஸ் தொற்றால் ஆண்டுக்கு 21,000 முதல் 143,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |