நாமலுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (Criminal Investigation Department) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், நாளை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடக பதிவு
இந்தநிலையில், இது தொடர்பில் வெளியாகிய சில சமூக ஊடக பதிவுகளில் நாமல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான பிரச்சினை கொடுத்தாலும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தருமாறு நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
