கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

Colombo Weather Floods In Sri Lanka
By Sathangani Nov 07, 2026 08:11 AM GMT
Report

கொழும்பில் நேற்று (06) மாலை எந்தவித தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் கனமழை பெய்தமையானது மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 49 நிமிடங்களில் 120 மில்லி மீற்றர் மழை கிடைத்துள்ளமையால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து நாகமுத்து பிரதீபராஜா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மேக வெடிப்பு என்றால் என்ன என்பது பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்.

சில மணி நேர மழையில் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - இன்று அவசர கலந்துரையாடல்

சில மணி நேர மழையில் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - இன்று அவசர கலந்துரையாடல்

அதிக மழைவீழ்ச்சி

குறுகிய நிலப்பரப்பில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் (10 செ.மீ) அதிகமாக மழை கிடைக்கும் போது மேக வெடிப்பு என வரையறுக்கப்படுகிறது.

மிக மிகக் கன மழை சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.

கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம் | Cloud Blasting In Colombo 120 Mm Heavy Rain Flood

வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று மேல்நோக்கிச் செல்லும்போது (Orographic lift), அங்கே கார் திரள் கார்முகில்கள் (Cumulonimbus Clouds) உருவாகின்றன.

லங்முயிர் விளைவு (Langmuir Effect) கோட்பாட்டின் படி மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் மேலெழும் வெப்பக் காற்றால் கீழே விழாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை

வெள்ள அனர்த்தம்

திடீரென மேல்நோக்கி வீசும் காற்று பலவீனமடையும் போது, மேகத்தில் தேங்கியுள்ள அத்தனை நீரும் ஈர்ப்பு விசையால் ஒரே நேரத்தில் கவிழ்த்து ஊற்றியது போல (அருவி போல்) கொட்டிவிடுகிறது.

குறுகிய நேரத்தில் கிடைக்கும் இந்த மழை வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.

இந்த மேக வெடிப்பு மழை மலைப்பாங்கான பகுதியில் நிகழும்போது பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு.

ஒரே இடத்தில் மீண்டும் சில நாட்கள் இடைவெளியில் மேக வெடிப்பு நிகழாது. ஆனால் மேக வெடிப்பு நிகழ்ந்ததன் பின் அந்த இடத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025