கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07.11.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் 129MM மழைவீழ்ச்சி
இதேவேளை, நேற்று (6) பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவாகிய நிலையில் கொழும்பில் 129 மில்லிமீற்றரும், மத்துகமவில் 95 மில்லிமீற்றரும், பதுரலியவில் 84 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தக் கனமழை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்பட்டதுடன், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |