கொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் வழமைக்கு
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Dharu
கொழும்பில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சில செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
மருத்துவமனையின் ஊழியர்கள் துரிதமாகச் சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுத்து, சில மணித்தியாலங்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்தாக தெரிவிக்கப்படுகிறது.
129 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி
கொழும்பில் நேற்றை தினம் சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நகரின் பல வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி