வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக ஆளுநர் சார்ள்ஸ் நியமனம்
Northern Province of Sri Lanka
P. S. M. Charles
By Vanan
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயகவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநராகக் கடந்த மாதம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இணைத் தலைமைப் பதவி
ஆனால், அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை.
இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக அவரை ஜனாதிபதியின் செயலாளர் நியமித்து மாவட்ட செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
