தரமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது
நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை (Polonnaruwa) காவல்துறை பிரிவின் கண்டிபுரய பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 51 வயதுடைய பன்னல மற்றும் சந்திவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
பொலன்னறுவை காவல்துறை பிரிவில் கைத்தொழில் பேட்டை பகுதியில் தரமற்ற தேங்காய் எண்ணெயை லொறி ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரும், தரமற்ற தேங்காய் எண்ணெயை உடமையில் வைத்திருந்த மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 7,920 லிட்டர் தேங்காய் எண்ணெய் கொண்ட 36 இரும்பு பீப்பாய்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகம் முன்னெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்