மாணவி அம்ஷிகா விவகாரம் : போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்
உயிரிழந்த மாணவி அம்ஷிகாவிற்காக ஏற்பாடு செய்யப்படட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
பின்னர் மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்து.
அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் குறித்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சில குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்க கூடிய வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 23 மணி நேரம் முன்
