தொடருந்தில் கைவிடப்பட்டிருந்த சிசு - சம்பவம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் தொருந்தின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிசு ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
சிசு மீட்பு
மீட்கப்பட்ட சிசு, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து குறித்த சிசு பிறந்து 10 நாட்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிசுவை தொடருந்தில் கைவிட்டுச் சென்றவர்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்ககப்பட்டிருந்தது.
கைது
இதற்கமைய சிசுவின் தந்தையான 26 வயதுடைய இளைஞர் கொஸ்லந்த பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதுடன் தாய் நேற்று இரவு பண்டாரவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
