துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு எழுந்துள்ள புதிய சர்ச்சை
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு இன்னமும் இணையத்தளம் கூட இல்லை என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் மூலம் தெரியவந்துள்ளது.
பில்லியன் கணக்கான டொலர்களை எதிர்பார்த்து நிறுவப்பட்ட குறித்த பொருளாதார ஆணைக்குழு தோல்வியடைந்த நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழுவிற்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று (09) அழைக்கப்பட்டனர்.
ஆணைக்குழுவின் நோக்கம்
இந்த முறையில் காணப்படும் பிரச்சினைகளையும் இவ்வளவு காலமும் இது தொடர்பான எவ்வித செயற்படும் மேற்கொள்ளப்படாமைக்கான காரணத்தை விளக்க கூறி கலாநிதி அர்சடி சில்வா கேள்வி ஒன்றை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சாலிய காரியவம்ச,
சர்வதேச மட்டத்தில் உள்ள ஒருவரை அதற்காக ஆட்சேர்ப்பு செய்வதே ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
நாங்கள் உண்மையில் நியூசிலாந்தில் இருந்து ஒருவரை பணியமர்த்தினோம். ஆனால் ஏப்ரல் மாதத்தில், நாட்டின் நிலைமை மாறியது.
அனைத்து முயற்சிகளும்
எனவே நாங்கள் அதை நிறுத்த வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை நான் செயல் இயக்குநராக பணிபுரிந்தேன்.
முன்னாள் செயற்பாட்டாளரான வைத்தியர் பிரியத் பந்துல முதல் தற்போதைய செயற்பாட்டாளர் வரை இது தொடர்பான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பான பிரச்சினையை அதிபர் மூலம் நாம் கலந்தாலோசிக்க தீர்மானித்தோம்.''என தெரிவித்தார்