கொழும்பு புறக்கோட்டையில் வியாபாரிகள் போராட்டம்..!
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
SL Protest
By Kiruththikan
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இந்திய வியாபாரிகளால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
முதன் முறையாக இந்திய வியாபாரிகளால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும், இலங்கையிலுள்ள இந்திய வியாபாரிகளை தடை செய்ய வேண்டாம் மற்றும் சிறு வியாபாரிகளின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைத்து குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும், போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி