கொழும்பு பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் -4.2% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம்
இந்த பணவீக்கம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆக பதிவாகியிருந்தததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2025 பெப்ரவரி மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டு பணவீக்கம் -0.2% ஆக உயர்ந்துள்ள நிலையில் இது 2025 ஜனவரி மாதத்தில் -2.6% ஆக பதிவாகியிருந்தது.
மேலும், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் ஆண்டு பணவீக்கம் -6.1% ஆகக் குறைந்துள்ளதுடன் இது 2025 ஜனவரி மாதத்தில் -4.7% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
