வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை
புதிய இணைப்பு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (23) 209.91 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,020.61 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.44 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இன்று (23) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,000 புள்ளிகளை கடந்துள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாளில் காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தை
இந்நிலையில், நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன.
அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.
அண்மையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச் சந்தை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
