யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து முற்றாக எரிந்து நாசம்! (காணொளி)
Colombo
Jaffna
By pavan
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (30.06.2023) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .
