கரையோர தொடருந்து சேவையில் தாமதம்: பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு
தண்டவாளம் உடைந்ததன் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.
கல்கிசை (Mount Lavinia) மற்றும் இரத்மலானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை வரை இயங்கிய அனைத்து அலுவலக தொடருந்துகளும் தாமதமின்றி இயக்க முடிந்ததாகத் தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவை
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு (Colombo) வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவையானது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேலதிக சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவையை வழங்கி வந்த கடுகதி தொடருந்து சேவை மேலதிகமாக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை குறித்த சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |