கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலயத்திற்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் - வழங்கப்பட்ட கால அவகாசம்
கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை மாலை 5 மணிவரை முன்னெடுக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், 3.30 மணிக்கு பின்னர் குறித்த இடத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடும் யாரும் அப்பகுதியில் இருக்கக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஐந்து மணி வரை சத்தியாக்கிரகம்
இந்த விடயம் தொடர்பில் போராட்டக்காரர்கள் ஐ.நா காரியாலயத்தில் முறையிட்டதையிட்டதையடுத்து ஐ.நா காரியாலய அதிகாரிகள் இரு தரப்பினருடனும் பேசியுள்ளனர்.
அதனடிப்படையில், போராட்டக்காரர்கள் அங்கு ஐந்து மணி வரை மாத்திரமே இருக்க முடியும் எனவும், ஐந்து மணிக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
