யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: சரிகமப பாடகர்கள் இலங்கை வருகை
Jaffna
Zee Tamil
Jaffna International Airport
Saregamapa Lil Champs
By Sathangani
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport) ஊடாக இவர்கள் இன்றைய தினம் (02.08.2025) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் “சரிகமப லிட்டில் சாம்ஸ்” பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியானது நாளை (03.08.2025) மாலை யாழ்ப்பாணம் - அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் பாடகர்களான திவினேஸ், புவனேஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்