ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து! சர்ச்சையை கிளப்பும் சிம்ப்சன் காணொளி
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பனின் (Donald Trump) உயிருக்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆபத்து என்ற கணிப்புடன் சிம்ப்சன் காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 1989 ஆம் ஆண்டு தி சிம்ப்சன்ஸ் என்ற கார்டூன் தொடர் வெளியாகி வருகிறது.
இந்த கார்டூன் தொடர் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் எனவும், இந்த தொடரில் வந்துள்ள சில காட்சிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்ப் மரணம்
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போன்ற தோற்றமுள்ள ஒரு நபர் ஆகஸ்ட் மாதத்தில் அதாவது இந்த மாதத்தில் உயிரிழப்பது போன்ற சிம்ப்சன் கார்டூன் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
"கடுமையான மார்பு நோயால் பாதிக்கப்பட்டு ஜனாதிபதி ஆகஸ்ட் 2025 இல் இறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என ஒலிக்கும் பின்னணி குரலுடன் அந்த காணொளி ஆரம்பமாகிறது.
இந்நிலையில், தற்போது சிம்ப்சன் காணொளி பகிரப்பட்டு வருவதுடன் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
