புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
யாழ் வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் யாத்திரைத் தளத்திற்கு வரும் பக்தர்கள் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவதை தவிக்குமாறு கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாத்திரைத் தலங்களில் ஒன்றாக யாழ்.வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் விளங்குகின்றது.
பக்தர்கள் குற்றச்சாட்டு
குறித்த இடத்திற்கு நாடு முழுவதும் இருந்து அதிகமான பக்தர்கள் நாளாந்தம் வருகை தருகிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் புனிதமான குறித்த ஆலய வளாகத்தை அசிங்கப்படுத்தும் வகையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவதாக பக்தர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு வரும் மக்கள் செபிப்பதற்காக மட்டுமே வருகை தருமாறும் புனிதமான இடத்தில் களியாட்ட நிகழ்வுகளை தவிர்க்குமாறும் பங்குத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |