யாழில் இடம்பெற்ற யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் - குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (13) வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி ம. றெக்ஸ் சவுந்தரா அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
இந்த நினைவேந்தலின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
13 பேர் படுகொலை
கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமானப்படையின் "சுப்பர் சொனிக்" விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழமை வாய்ந்த குறித்த தேவாலயம் இந்த தாக்குதலில் பகுதியளவில் கடும் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |