உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்நிகழாமைக்கான பயணம்
“உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில் பெரும் எண்ணிக்கையான தாய்மார் பதிலை அறியாமலேயே உயிரிழந்துவிட்டனர் .

இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது. வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும். அச்செயன்முறைக்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |