ரணில் ஆட்சியில் நீடிப்பதால் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி: எச்சரிக்கும் பௌத்த தேரர்
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை, மீரிகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை முன்னிறுத்த முடியாதநிலையில் உள்ளனர்.
மக்கள் போராட்டம்
பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார் அத்தோடு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மேலும் இரண்டு வருடங்களுக்கு இந்த நாட்டில் ஆட்சியில் நீடிப்பாராயின் சில பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் முன்னெடுக்கும் நிலையும் ஏற்படும் அத்தோடு ஒரு சில தரப்பினர் முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்த நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலை நடத்தமாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |