வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை : தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
Election
Sri lanka election 2024
sl presidential election
Sri Lanka election updates
By Shalini Balachandran
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த தீர்மானமானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி
இருப்பினும் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்கும் போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி