இராஜாங்க அமைச்சுப்பதவிக்காகவும் ஆளும் தரப்புக்குள் கடும் போட்டி
சிறிலங்கா பொதுஜன பெரமுன
இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அது இருபது அல்லது இருபத்தைந்திற்குள் மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரியின் சுதந்திரக்கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் நான்கு எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர்கள் நால்வரும் அமைச்சுப் பதவிகளை வகிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த வாரம் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
முன்னதாக அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதிலும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியதாகவும், அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது
