ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான 40 கோடி பெறுமதியான வீடு: CID விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு 05, டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள சுமார் 40 கோடி பெறுமதியான வீடொன்று தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த இந்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முறைப்பாடு
முறைப்பாடு தொடர்பான உண்மைகளைச் சரிபார்க்க, முறைப்பாட்டாளர்களிடமிருந்து மேலும் வாக்குமூலங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

விசாரணைகளின் அடுத்த கட்டமாக ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச 2001 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி பதவியேற்கும் வரை இந்த வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு குறித்த வீடு ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இந்த விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |