கணினி விளையாட்டிற்கு அடிமையாகிய குழந்தைகள் - 7700 மணிநேரம் விளையாட்டு..!
Canada
By Dharu
தங்கள் பிள்ளைகள் கணினி விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாகக் கூறி மூன்று பெற்றோர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க கனேடிய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான கணினி விளையாட்டு நிறுவனத்திற்கு எதிராக பெற்றோர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கணினி விளையாட்டுக்கு அதீத அடிமையானதால், தங்களது குழந்தைகள் தூங்கவும், சாப்பிடவும், குளிக்கவும் மறுத்துவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
7700 மணிநேர விளையாட்டு

இரண்டு வருடங்களுக்குள் ஒரு குழந்தை 7700 மணிநேரம் இந்த கணினி விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கணினி விளையாட்டுக்கு அடிமையாவது அங்கீகரிக்கப்பட்ட மனநலக் கோளாறு அல்ல என்று சம்பந்தப்பட்ட கணினி விளையாட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி