அனுர வெளியிட்ட மிரட்டல் செய்தி
Anura Kumara Dissanayaka
Sri Lankan political crisis
By Vanan
“சம்பந்தப்பட்டவர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் இச்செய்தி வெளிவந்துள்ளது.
குறித்த ஆவணங்கள் ராஜபக்ச அரசாங்கத்தினை கவிழ்க்க கூடிய ஆவணங்களாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) April 29, 2022


4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்