கத்தி குத்தில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான மோதல்
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கத்திக்குத்து தாக்குதல்
இந்நிலையில் இரு சகோதரர்களின் சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.
இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |