இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு: அமெரிக்கா கூறிய அந்த விடயம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியான உறவை பேணுவதற்கு விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகவும் ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேச்சுவாா்த்தைகள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லர், “இந்திய பிரதமரின் வாழ்த்து அறிக்கையை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை அமெரிக்கா மதிக்கிறது.
மேலும், அவ்விரு நாடுகளும் பயனுள்ள மற்றும் அமைதியான உறவைக் கொண்டிருப்பதை பாா்க்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளை நாங்கள் வரவேற்போம்.
விரிசல்
ஆனால், பேச்சுவாா்த்தைகளின் வேகம், நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை இந்தியாவும் பாகிஸ்தானும் தீா்மானிக்க வேண்டிய விடயம்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்துக்குப் பிறகு, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |